கொடைக்கானலும் அதன் அருமையும்
மே 1 : உலக தொழிலாளர் தினம் என்பதால் விடுப்பு அனைவருக்கும். கொல்லம் செல்வதாக இருந்த பயணம் கடைசியில் கொடை போனது..நீண்ட நேர பயணம் சுமார் 7 மணி நேரங்கள் எடுத்து கொன்டது பரப்பாடியில் இருந்து. அதன் அழகை விவரிக்க வார்த்தை இல்லை. ஒவ்வொன்றாக பார்ப்போம்..நாங்கள் இங்கிருந்து கிளம்புவதற்கு காலை சற்று தாமதமானது அதன் விளைவு தான் இறுதியில் கார்டன் ஐ மூடிவிட்டார்கள். முதலில் போகும் வழியில் வெள்ளி நீர் வீழ்ச்சி அது கொடையின் கழிவு நீர் என்றாலும் அதன் முன் புகைப்படம் எடுக்க யாரும் முகம் சுழிக்கவில்லை..கூட்டம் அலை மோதியது..பல வண்ண டோப்பாக்கள்,ஹேட் போன்றவற்றை அனிந்து நானும் புகைப்படம் எடுத்துக் கொன்டேன்..பின் மினி வண்டி மேல் நோக்கி நகர தொடங்கியது..உச்சத்தை அடைந்தாயிற்று. அவ்விடத்தில் நான் கண்ட காட்சி என்னை வியக்க வைத்தது. மேகங்கள் பூமிக்கு முத்தம் கொடுத்து கொண்டு இருந்தது. அருமையான சூழல். அங்கு எனது நீண்ட நாள் கனவான கேரட் அதன் செடியுடன் வாங்கி சாப்பிட்ட அனுபவம் மறக்க முடியாது..பிறகு அங்கிருந்து கிளம்பி தூண்பாறை பார்க்க சென்றோம் அருமையாை அனுபவம். பிறகு அங்கிருந்து பசுமை பள்ளத்தாக்கு♥♥ அருமையான அழகு..அதன் பின்னர் அங்கிருந்து ஏரி..டேஷிங் கார்ஸ் 7டி என அருமையான இடம் ...ஏரியின் அருகில் இருந்ததால் என்னவோ6:39 மணிக்கே குளிர் ஆரம்பித்து விட்டது... மொத்தத்தில் நான் கண்ட இடத்தில் ஒரு அருமையான இடம் #கொடைக்கானல்♪ கடல் மட்டத்தில் இருந்து 6700 அடி
எனக்கும் ஆசை துளிர் விடுகிறது உன் அனுபவத்தைப் பார்த்து
ReplyDelete